பொது

தேர்தல் வழிகாட்டியாக சுங்கை பாக்காப் பிரச்சாரத்தை நெறிமுறைகளுடன் மேற்கொள்ள உறுதி

23/06/2024 05:22 PM

நிபோங் திபால், 23 ஜூன் (பெர்னாமா) -- வரும் காலங்களின் தேர்தலுக்கான வழிகாட்டியாக, சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை நெறிமுறைகளுடன் தாம் மேற்கொள்ளவிருப்பதாக நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜோஹாரி அரிஃபின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தொகுதியில் ஒவ்வொரு கட்சியின் பிரச்சாரமும் சம்பந்தப்பட்ட வேட்பாளரைப் பிரதிபலிக்கும் என்பதால், அது நல்ல முறையிலும் நெறிமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரச்சாரத்தின்போது ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்காமல், கட்சிக்கு நற்பெயரைக் கொண்டு வரும் வகையில், விவேகமாக பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு டாக்டர் ஜோஹாரி கேட்டுக் கொண்டார்.

அவதூறு மற்றும் தவறான அம்சங்கள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் பிரச்சார நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்கட்சியினருக்கும் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)