உலகம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் அமோரி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது

23/06/2024 06:22 PM

ஜப்பான், 23 ஜூன் (பெர்னாமா) -- ஒசாக்கா நோக்கி பயணித்த ஜப்பான் ஏர்லைன்ஸ், ஜெ.ஏ.எல் பயணிகள் விமானம் ஒன்று, அமோரி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

அந்த விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றியதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாகத் தரையிறங்கியது.

அந்நாட்டு நேரப்படி பிற்பகல் மணி 1.15-க்கு, அந்த விமானம் அமோரி விமான நிலையத்திலிருந்து ஒசாக்கா அனைத்துலக விமான நிலையம் நோக்கி பயணித்தது.

புறப்பட்ட சிறிது நேரத்தில், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரினால் அது திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோடு அமோரி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இச்சம்பவத்தில், விமானத்தில் இருந்த 47 பயணிகளுக்கும் அதன் பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பயணத்தின்போது, சம்பந்தப்பட்ட விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் தீப்பற்றியதைக் காண முடிந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவ்விமானத்தின் இயந்திரக் கோளாருக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)