பொது

15-வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டம் அக்டோபர் 14-இல் தொடங்கும்

24/06/2024 08:16 PM

கோலாலம்பூர், 24 ஜூன் (பெர்னாமா) -- 15-வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான மூன்றாவது கூட்டத் தொடர், அக்டோபர் 14-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 12-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய, இரண்டாம் கூட்டத் தொடரின் முதலாவது நாளான இன்று, உரையாற்றிய மக்களவைத் தலைவர், டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல், புதிதாக மாற்றப்பட்டிருக்கும் அத்தேதிகளில், 35 நாட்களுக்கு அக்கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அக்டோபர் 7-லிருந்து டிசம்பர் 5-ஆம் தேதி வரையில் அக்கூட்டம் நடைபெறும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

காலஞ்சென்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால், அரசியல் தலைவரும் முன்னாள் பென்சியாஙான் நாடாளுமன்ற உறுப்பினர், டான் ஶ்ரீ ஜோசஃப் குரூப் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட மக்களவை, அவர்களுக்கு மரியாதை செலுத்தியது.

இதனிடையே, 15-வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணையின் முதல் கூட்டத்தில், மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் 14 சட்டங்களை அங்கீகரித்திருப்பதாக ஜொஹாரி தெரிவித்தார்.

அதே காலக்கட்டத்தில், மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களுக்கு மேலவையில் ஒப்புதல் பெறப்பட்டதை முன்னாள் மேலவைத் தலைவர் தமக்கு தெரிவித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விநியோகிப்பு சட்டம், போலீஸ் சட்டம், வருமான வரிச் சட்டம், கோரப்படாத பணச் சட்டம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)