பொது

டிவெட் வாய்ப்பு வழங்கப்படுவதில் பாரபட்சமில்லை

25/06/2024 06:27 PM

கோலாலம்பூர், 25 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் டிவெட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதில் மலேசிய மக்களின் மத்தியில் அரசாங்கம் பாரபட்சம் பார்ப்பதில்லை.

சீனாவில் டிவெட் தொடர்பான பயிற்சியை மேற்கொள்வதற்கு, இனபேதமின்றி நாட்டில் உள்ள மாணவர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளித்ததன் வழி நிரூபிக்கப்பட்டுள்ளதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால டிவெட் தொடர்பான பயிற்சியைப் பெறுவதற்கும், நாட்டின் டிவெட் தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையில் சூழலை மாற்றும் ஒரு வழியாகவும், சீனாவின் 220 நிறுவனங்கள் 5,125 மலேசிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அளித்துள்ளதாக, கடந்த மே 30-ஆம் தேதி டாக்டர் அஹ்மட் சாஹிட் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)