பொது

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்; இரு உள்நாட்டு ஆடவர்களை சுட்டு வீழ்த்திய போலீஸ்

26/06/2024 08:13 PM

பட்டர்வெர்த், 26 ஜூன் (பெர்னாமா) -- நேற்று பின்னிரவு மணி 2 அளவில், சுங்கை லோகான், ஜாலான் பெர்மாத்தாங் பாருவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், குற்றவாளிகள் என்று நம்பப்படும் இரு உள்நாட்டு ஆடவர்களை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307 மற்றும் 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் செக்‌ஷன் 8-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் கூறினார்.

மாநில போலீஸ் தலைமையகம், செபெராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுத் துறை ஜேஎஸ்ஜே அதிகாரிகள், ஜாலான் பொகோக் செனாவிலிருந்து ஜாலான் பெர்மாத்தாங் பாருவை நோக்கிச் செல்லும் சாலைச் சந்திப்பில் சந்தேகத்திற்குரிய நிலையில் மைவி ரகக் காரைக் கண்டனர்.

பின்னர், அக்காரை ஓட்டியவரிடம் வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் கூறியும், அவர் நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றதோடு, போலீசாரை நோக்கியும் சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, போலீசாரும் துப்பாக்கியால் சுட்டதால், அவ்விரு சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)