பொது

அன்வாரை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்

29/06/2024 06:05 PM

கோலாலம்பூர், 29 ஜூன் (பெர்னாமா) --  இந்தியன் 2 திரைப்பட விளம்பரத்திற்காக மலேசியா வந்திருந்த அதன் கதாநாயகனும் பிரபல இந்தியத் திரைப்பட நடிகருமாகிய கமல்ஹாசன், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று சந்தித்தார். 

ஊழலுக்கு எதிரான அம்சங்கள் உட்பட, திரைப்படத் துறை தொடர்பில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் அவர்களின் 30 நிமிட சந்திப்பு வழிவகுத்ததாக அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

1996-ஆம் ஆண்டு திரையீடுக் கண்டு வெற்றிக் கண்ட இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவரவிருக்கும் இந்தியன் 2  படத்தின் விளம்பரத்திற்காக கமல் தமது சக நடிகர்களுடன் நேற்று மலேசியா வந்தார். 

இந்தியன் திரைப்படத்தில் ஊழலை எதிர்ப்பவராகவும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகியாகவும் கமல் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  

அக்காலக்கட்டத்தில், மிக அதிக வசூலை குவித்த திரைப்படமாகவும் இந்தியன் விளங்கியது குறிப்பிடத்தக்கது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)