விளையாட்டு

2024 யூரோ: காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதும் துருக்கி

03/07/2024 07:48 PM

அலியன்ஸ், 03 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ கிண்ண காற்பந்து போட்டி.. 

சிறந்த 16 நாடுகள் சந்திக்கும் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 3-0 என்ற கோல்களில் ரோமானியாவைத் தோற்கடித்திருக்கின்றது. 

இதன் வழி அது காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. 

குழு பிரிவு ஆட்டங்களில், தடுமாறி மூன்றாம் இடம் பிடித்த நெதர்லாந்து இந்த இரண்டாம் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. 

அதன் முதல் கோல் முதல் பாதியிலும், எஞ்சிய இரு கோல்கள் இரண்டாம் பாதியிலும் போடப்பட்டன. 

கோல் அடிப்பதில், ரோமானியா ஆட்டக்காரர்கள் தீவிரம் காட்டினாலும்,  நெதர்லாந்தின் தற்காப்பு அரணை தகர்க்க முடியாமல் திணறி போட்டியிலிருந்து வெளியேறியது. 

இதனிடையே, இரண்டாம் சுற்றின் மற்றுமொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவும் துருக்கியும்  மோதின.

அதில், துருக்கி 2-1 என்ற கோல்களில் வெற்றிப் பெற்று, காலிறுதியில் நெதர்லாந்துடன் களம் காணவிருக்கின்றது.

முதல் நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து ஆட்டத்தை உற்சாகமாகத் தொடங்கிய துருக்கி, அதன் மற்றுமொரு கோலை இரண்டாம் பாதியில் போட்டது.

66-வது நிமிடத்தில் போட்ட ஒரே கோலுடன், ஆஸ்திரியா போட்டியிலிருந்து விடைபெற்றது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)