உலகம்

கைப்பற்றிய தைவான் மீன்பிடி படகை சீன அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் - தைவான்

03/07/2024 07:55 PM

தைபே, 03 ஜூலை (பெர்னாமா) -- தைவான் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் இயங்கி வந்த தைவான் மீன்பிடி படகை சீன அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகத் தைவான் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோரி வரும் நிலையில், சீன அதிகாரிகளின் இச்செயல் தைவானின் சினத்தைத் தூண்டியுள்ளது.

தைவான் கட்டுப்பாட்டில் இருக்கும் கின்மேன் எனும் அத்தீவு சீனாவின் சியாமென் மற்றும் குவான்சு அருகே உள்ளது. 

தனது கடலோரக் காவல்படையின் கப்பலை அனுப்பி எச்சரித்தாகவும், மீன்பிடிப் படகை விடுவிக்குமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டதாகவும் தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், சீன அதிகாரிகள் அந்த படகை விடுவிக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)