விளையாட்டு

கோபா அமெரிக்கா 2024: பிரேசில் - கொலம்பியா சமநிலை

03/07/2024 07:56 PM

அரிசோனா, 03 ஜூலை (பெர்னாமா) -- 2024 கோபா அமெரிக்கா கிண்ண காற்பந்து போட்டி..

இன்று காலை நடைபெற்ற டி குழுவின் கடைசி ஆட்டத்தில் பிரேசிலும் கொலம்பியாவும் 1-1 என்று சமநிலை கண்டன.

சமநிலை கண்டாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொலம்பியா காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.

பலம் பொருந்திய இரு நாடுகள் சந்தித்துக்கொண்ட இவ்வாட்டம் கடும் சவாலாக அமைந்தது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரேசில் அதன் ஒரே கோலைப் போட்ட வேளையில், கொலம்பியாவின் ஒரே கோல் முதல் பாதி இறுதியில் அடிக்கப்பட்டது.

7 புள்ளிகளோடு பட்டியலில் முன்னிலை வகிக்கும் கொலம்பியாவும்
ஐந்து முறை உலக கிண்ண வெற்றியாளரான பிரேசிலும் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கினறன.

இதனிடையே, டி குழுவில், கொஸ்டா ரிகா 2-1என்ற நிலையில் பராகுவேவை அணியை வீழ்த்தியது.

ஆயினும், காலிறுதிக்கு முன்னேற முடியாமல் கொஸ்டா ரிகா போட்டியில் இருந்து விடைபெற்றது.

முந்தைய அடைவுநிலைகளின் வழி, கொஸ்டா ரிகா 4 புள்ளிகளோடு பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளதால், அது காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)