உலகம்

தென் சீனாவில் கடும் மழையும் வெள்ளமும்

03/07/2024 08:07 PM

பெய்ஜிங், 03 ஜூலை (பெர்னாமா) --  தென் சீனாவில் பெய்யும் கடும் மழையால் யாங்ஸி ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

சீனா கடந்த சில மாதங்களாக மோசமான பருவநிலையை எதிர்கொள்கிறது.

ஒருபக்கம் கொளுத்தும் வெயில், மறுபக்கம் அடைமழை.

இந்நிலையில், வெள்ளத்தை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட பகுதிவாசிகள் தயார்ப்படுத்திக்கொண்டுவருகின்றனர். 

சியாங்சு மாநிலத்தில் உள்ள சீனாவின் ஆக நீளமான ஆறான யாங்ட்சிவின் பகுதியில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தது.

கிழக்கு சீனாவில் கடும் மழை காரணமாக கிட்டத்தட்ட 250,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வகைகளை ஆக அதிக அளவில் வெளியேற்றும் நாடு சீனா. 

அது, பருவநிலை மாற்றத்துக்கு வழிவிடுவதாகவும் தீவிரமான, மேலும் கீழுமான வானிலை நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)