உலகம்

மாலியின் மத்திய பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் 40 பேர் பலி

03/07/2024 09:26 PM

பமாகோ, 3 ஜூலை (பெர்னாமா) -- கிளர்ச்சிகாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலியின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள அல்கய்தா மற்றும் டாஎஷ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பல பகுதிகளில் ஒன்றான மோப்டி பகுதியில் உள்ள டிஜிகுபோம்போ கிராமத்தில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

"இது மிகவும் மோசமான தாக்குதல், ஆயுதம் ஏந்தியவர்கள் கிராமத்தை சுற்றி வளைத்து மக்களை சுட்டுக் கொன்றனர்," என்று மேயர் பேங்கஸ் மௌலே கிண்டோ கூறினார்.

இருப்பினும், உண்மையான இறப்பு எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.

தங்களின் அடையாளத்தை கூற விரும்பாத இரண்டு உள்ளூர் அதிகாரிகள், அச்சம்பவத்தில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

திருமண வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஆயுதம் ஏந்தியவர்கள் கிராமத்தை சுற்றி வளைத்து சுடும்போது, சிலர் தப்பித்து ஓடினாலும் அதிகமான ஆண்கள் பலியானர்.

தாக்குதல் நடத்தியவர்களை இன்னும் அடையாளம் காணப்படாத வேளையில், அச்சம்பவத்திற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)