பொது

தெக்குன்: சுங்கை பாக்காப்பில் இருவர் பயன்

28/06/2024 08:10 PM

நிபோங் திபால், 28 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிகேபி-க்கு பின்னர் புறநகர் பகுதிகளில் தொழில்முனைவோர் வர்த்தகம் செய்வது எளிதானது காரியம் அல்ல.

இருப்பினும், சுங்கை பாக்காப் தொகுதியில் இரு தொழில்முனைவோருக்கு தெக்குன் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கிய நிதி பேருதவியாக அமைந்துள்ளது.

தற்போது அவர்கள் தங்களது வர்த்தகத்தை ஒரு சிறந்த நிலைக்கு விரிவுபடுத்த உதவுவதோடு நல்ல வருமானம் பெறவும் வகை செய்துள்ளது.

தெக்குன் வாயிலாக பெற்ற சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான கடனுதவியின் மூலம், 37 வயதுடைய தமது கணவர் முஹமட் ஹில்மி இட்ரிஸ் ரசாக்குடன்  இணைந்து,  தங்களது உணவகத்தை அனைவரும் கவரும் வகையில் மேம்படுத்தி இருப்பதாக கருடா பிஸ்ட்ரோ உணவக உரிமையாளர் அஸி அஸீனா முஹ்மட் நையிம்  தெரிவித்தார்.

"தெக்குனில் கடனுதவி பெற நாங்கள் முயற்சித்தோம். தெக்குன் உணவத்திற்கான பொருட்களை வாங்க வகை செய்தது," என்றார் அவர்.

இதனிடையே, சொகுசு கார் பழுதுபார்க்கும் பட்டறையை நடத்தி வரும் 31 வயதுடைய தொழில்முனைவர் எம். மோகன் ராஜ்,  சிம்பாங் அம்பாட்டில் தமது தொழிலை மேம்படுத்த தெக்குனிடமிருந்து  40 ஆயிரம் ரிங்கிட் கடன் பெற்றுள்ளார்.  

"நல்லது. நிறைய பழுதுபார்க்கும் உபகரணங்களை வாங்கினேன். முன்னதாக, எனது சொந்த பணத்தை பயன்படுத்தினேன். இதற்கு பின்னர், நிறைய உபகரணங்களை வாங்குவேன்," என்று மோகன்ராஜ் கூறினார்.

இவ்வாண்டு 60 கோடி ரிங்கிட்  ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 33 ஆயிரத்து 300 நிபுணத்துவம் சாரா தொழில்முனைவோர் மற்றும் குறு தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்க தெக்குன் நேஷனல் இலக்கு கொண்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]