பொது

சமூக ஊடகத் தரப்பு அதிக தகவல் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்

02/07/2024 08:06 PM

புத்ராஜெயா, 2 ஜூலை (பெர்னாமா) -- அதிகாரப்பூர்வ அரசாங்க சமூக ஊடக கணக்குகளை, திறமையான, பயனுள்ள மற்றும் பாதுகாப்பாக நிர்வகிப்பதில், சமூக ஊடகத் தரப்பு அதிக தகவல் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

கொள்கைகள், வழிகாட்டிகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளின் வளர்ச்சி உட்பட இணைய பாதுகாப்பு மற்றும் நெருக்கடி நிர்வகிப்பு குறித்த புரிதல் ஆகியவையும் அதில் அடங்கும் என்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-இன் நிர்வாக இயக்குநர் டத்தோ முஹமட் அலி ஹனாஃபியா முஹமட் யூனோஸ் தெரிவித்தார்.

தொழில் ரீதியாக அபாயம், தகவலின் துல்லியம் மற்றும் உள்ளடக்கத்தை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றை நிர்வாக முறையில் கையாள முடியும் என்பதை உறுதிப்படுத்த அந்த அறிவுத்திறன் அவசியம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளின் நடத்துனர்களுக்கு பல்வேறு இலக்கவியல் சம்பந்தப்பட்ட விவரங்கள் செலுத்தப்பட வேண்டும்.

இதன் வழி. அரசாங்கம் வழங்கும் அனைத்து செய்திகளும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் அவர் கூறினார்.

''அரசாங்கத்தின் சமூக ஊடகக் கணக்கின் மீதான மக்களின் நம்பிக்கை மிக முக்கியமானது, எனவே, அரசாங்க அமைப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்வதில் குறிப்பாக சமுக ஊடக பயனீட்டாளர்களிடம் தெரிவிப்பதில் நம்பகம் வாய்ந்த தகவல் பயன்படுத்தப்படுகிறது,'' என்றார் முஹமட் அலி ஹனாஃபியா.

அதனை உணர்ந்து, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பதற்குப் பொறுப்பான ஊழியர்கள், கணக்கு நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களைக் கையாளும் புரிதலையும் திறமையையும் பெற்றிருப்பதை உறுதிசெய்ய, எம்சிஎம்சி கடந்த வாரம் புதன்கிழமை SocialGov2024 கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)