அரசியல்

நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் எஸ்பிஆர்எம்; பரிந்துரை விளைவை அரசாங்கம் ஆராயும்

18/06/2024 06:00 PM

புக்கிட் மெர்தாஜாம், 18 ஜூன் (பெர்னாமா) --  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம்-ஐ நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் வைப்பதற்கான பரிந்துரையின் விளைவுகள் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்யும்.

அவ்விவகாரம் தொடர்பில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னர் அப்பரிந்துரைக் குறித்த கடுமையான நிபந்தனைகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''நாம் விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கீழ் என்றால், அரசியல்வாதிகளின் கீழ், சில நேரம் கண்காணிக்கப்பட வேண்டும். ஆகவே, அதன் தாக்கத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் செயற்குழு என்பது எஸ்பிஆர்எம்-மிம் கண்காணிப்பில் உள்ளது. அதன் கடுமையான நிபந்தனைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்,'' என்றார் அவர்

பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டாலும் ஒருவரின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் முறைக்கேடு ஏற்பட்டால் விசாரணையை மேற்கொள்வது எஸ்பிஆர்எம்-இன் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வானொலி நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட நேர்காணலின்போது,எஸ்பிஆர்எம்-ஐ நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் வைப்பதற்கான பரிந்துரைக்கு தாம் உடன்படவில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)