விளையாட்டு

கோபா அமெரிக்கா; காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா

29/06/2024 07:56 PM

அரிசோனா, 29 ஜூன் (பெர்னாமா) கோபா அமெரிக்கா கிண்ண காற்பந்து போட்டி, அரிசோனாவில் இன்று அதிகாலை நடைபெற்ற டி குழுவுக்கான ஆட்டத்தில், கோஸ்டா ரிகாவை 3-0 என்ற கோல்களில் வீழ்த்தி, கொலம்பியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், கொலம்பிய 30-வது நிமிடங்களுக்கு பின்னரே கோல் அடிக்கத் தொடங்கியது. 

31-வது நிமிடத்தில், லிவர்பூல் நட்சத்திரம் லுயிஸ் டியாஸ் முதல் கோலை அடித்தன் வழி,  ஆட்டத்தின் முதல் பாதி 1-0 எனும் நிலையில் நிறைவடைந்தது. 

தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியிலும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா மேலும் 2 கோல்கள் அடித்து அடுத்த சுற்றில் கால் வைத்தது. 

6 புள்ளிகளோடு அது பட்டியலில்  முதலிடம் வகிக்கின்றது. 

இதனிடையே, 'டி' குழுவின் மற்றுமொரு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல்களில்  பராகுவேயை வீழ்த்தியது.

முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கொஸ்டாரிகாவுடன்  சமன் கண்ட பிரேசிலுக்கு, இப்போட்டியில், இது முதல் வெற்றியாகும். 


-- பெர்னாமா