பொது

கெந்திங் மலை விபத்த தொடர்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

01/07/2024 07:27 PM

கோலாலம்பூர், 01 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை கெந்திங் மலையில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தின் பெர்மிட், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதியே காலாவதியானதோடு, அப்பேருந்தும் 15 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனம் சட்டத்தை மீறி இருப்பதும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாததும் தெளிவாக தெரிய வருவதால், அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தரை பொது போக்குவரத்து நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் நாளை தொடங்கி சுற்றுலா பேருந்துகளை உட்படுத்தி, மிகப்பெரிய அளவிலான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)