பொது

சுகாதார பணியாளர்களை நியமிப்பது தொடர்பான கொள்கைகளின் பரிந்துரை ஆராயப்படுகின்றன

01/07/2024 07:20 PM

கோலாலம்பூர், 01 ஜூலை (பெர்னாமா) --  மனித வள சீர்திருத்த திட்டத்தின் மூலம் சுகாதார பணியாளர்களை நியமிப்பது, மற்றும் பணிக்கு அமர்த்துவது தொடர்பான சில புதிய கொள்கைகளின் பரிந்துரைகளை, சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைச்சின் சுகாதார வசதிகளில், மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வுக் காணும் அமைச்சின் முயற்சியே இதுவாகும் என்று, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

இன்று, மக்களவையில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் தற்போதைய விகிதத்தையும், மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு  சுல்கிப்ளி அஹ்மட் அவ்வாறு பதிலாளித்தார்.

2025ஆம் ஆண்டில் 400 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற இலக்கை அடைய சுகாதார அமைச்சின் சுகாதார வசதிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)