பொது

பெர்கெசோவின் இரு சலுகைகளைப் பெறுகிறார் நிருபர் கமால் ஹுசைனி தாயார்

01/07/2024 08:30 PM

கோலாலம்பூர், 01 ஜூலை (பெர்னாமா) -- கடந்த மாதம் 8-ஆம் தேதி மறைந்த நிருபர் ஹுஸ், அல்லது கமால் ஹுசைனி கமாலுடினின் தாயார் நூர் ஹமிட், சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோவில் இருந்து இரு சலுகைகளைப் பெற தகுதிப் பெற்றிருக்கின்றார்.

கமால் ஹுசைனி, 1969-ஆம் ஆண்டு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம், சட்டம் 4-இன் கீழ் செய்த பதிவின் வழி, 79-வயதுடைய நூர் ஹமிட், மாற்றுத்திறனாளி மற்றும் நிர்வாக நன்மைகள் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதிப் பெறுவதாக, கோலாலம்பூர் பெர்கெசோ இயக்குநர் முஹமட் அஸ்ரி ஙோஸ்மான் கூறினார்.

நூர் ஹமிட், காலமான கமால் ஹுசைனின் இறுதி சடங்கை மேற்கொண்ட செலவான 3,000 ரிங்கிட்டைப் பெற்றதோடு, வாழ்நாள் முழுவதும் மாதம் 1,027 ரிங்கிட் ஓய்வூதியம் பெறுவார் என்றும் மொஹமட் அஸ்ரி மேலும் கூறினார்.

இன்று அம்பாங் ஜெயாவில் உள்ள நூர் ஹமிட் இல்லத்திற்கு பெர்கேசோ தரப்புடன் வருகை மேற்கொண்டிருந்த போது முஹமட் அஸ்ரி அவ்வாறு கூறினார்.

அவரோடு, பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடினும் சென்றிருந்தார்.

தமது தாயாருமான நூர் ஹமிட்டிற்கு பெர்கேசோ இந்த சலுகையை வழங்கியதற்கு அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)