விளையாட்டு

2024 யூரோ: அடுத்த சுற்றில் இங்கிலாந்து - ஜெர்மனி

01/07/2024 08:33 PM

பெர்லின், 01 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ காற்பந்து போட்டி.

சிறந்த 16 நாடுகள் சந்திக்கும் சுற்றில் இங்கிலாந்து 2-1 எனும் நிலையில் சுலோவாக்கியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் சுலோவாக்கியா அதன் முதன் கோலை அடித்தது.

இரண்டாம் பாதியின் இறுதி நிமிடம் வரை அதே நிலை நீடிக்க, அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து செல்லுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

ஆனால், கடைசி நிமிடங்ளில் இரு கோல்கள் அடித்து இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பித்து காலிறுதியில் கால் வைத்தது.

மற்றுமோர் ஆட்டத்தில், ஸ்பெயின் - ஹோர்ஜியா அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் தனது அபார ஆட்டத்தால் 4-1 என்ற கோல்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]