பொது

ரொக்கமற்ற மக்கள் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு

01/07/2024 08:34 PM

போர்ட் டிக்சன், 01 ஜூலை (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் அளவிலான ''Cashless Society'' எனப்படும் ரொக்கமற்ற மக்கள் திட்டத் தொழில்முனைவோர் மற்றும் வருகையாளர்களிடம் இருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது.

மேலும், இந்த செயல்முறை இன்றைய வாழ்க்கை முறைக்கு தகுந்ததாகவும், வணிகத்தை விரைவாக, எளிதாக, பாதுகாப்பாக மேற்கொள்ளவும் உதவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2027-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் இலக்கவியல் பொருளாதாரத் திட்டம், PEDNS 2027 வழி, மாநில அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட இத்திட்டம் அம்மாநில மக்களை இலக்கவியல் மயத்திற்கு இட்டுச் செல்லும் என்று மாநில பாரம்பரியம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் இலக்கவியல் செயற்குழுவின் தலைவர் டத்தோ முஹமட் ஃபைசால் ரம்லி தெரிவித்தார்.

ஓரிட மக்கள் மத்தியில் ரொக்கமற்ற கட்டணம் செலுத்துவது குறித்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் நோக்கத்தில் மாநில அரசாங்கம், நிதி சேவை வழங்குநர், வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் முயற்சியாக ''Cashless Society'' மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

நேற்று, போர்ட் டிக்சன், கம்போங் சி ரூசா, தேசிய தகவல் பரப்பு மையம், நாடி-இல், நெகிரி செம்பிலான் அளவிலான ரொக்கமற்ற மக்கள் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதிலும் 13 இடங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டம் தங்களின் வணிகம் சுமூகமாக நடைபெற பெரிதும் உதவுவதாக மாற்றுத்திறனாளி தொழில்முனைவோரான ரொசாய்டா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)