பொது

கொவிட்-19 தொடர்பான எஸ்.ஓ.பி மறு ஆய்வு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்

29/06/2024 06:49 PM

நீலாய், 29 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றுடன் சேர்ந்து வாழும் நிலைக்கு நாடு மாறியுள்ள நிலையில் அத்தொற்று தொடர்பான செயல்பாட்டு தர விதிமுறைகளான எஸ்.ஓ.பியை மறு ஆய்வு செய்வது குறித்த விபரங்களை சுகாதார அமைச்சு விரைவில் வெளியிடும்.

கண்காணிப்பு உத்தரவு HSO, சுவாசக் கவசம் அணிதல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிவித்தல் ஆகிய மூன்று அம்சங்கள் அதில் அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்று எஸ்.ஓ.பியின் திருத்தம் குறித்து அமைச்சரவை ஒப்புக்கொண்டதாகவும், இது தொடர்பில் பின்னர் நிர்ணயிக்கப்படும் தேதியில் சுகாதார தலைமை இயக்குநர் அதனை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுல்கிஃப்லி கூறினார்.

இன்று சனிக்கிழமை, நெகிரி செம்பிலான் நீலாயில் 2024 மலேசிய ஊட்டச்சத்து மாதத்தை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502