உலகம்

ஸ்பெயினின் கேனரி தீவில் ஐவர் பலி

20/06/2024 07:22 PM

பார்சிலோனா, 20 ஜூன் (பெர்னாமா) -- ஸ்பெயினின் கேனரி தீவு, தெற்கு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த படகில் ஐந்து குடியேறிகள் இறந்து கிடந்ததாக அந்நாட்டின் கடல்சார் மீட்புக் குழு இன்று தெரிவித்துள்ளது.

டெனெரிஃப் தீவில் இருந்து தெற்கே சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் படகு மிதந்தது குறித்து பாதுகாப்புப் படையினர் நேற்று மீட்புக் குழுவினரிடம் எச்சரித்தினர்.

68 பேரைக் மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். 

கப்பலில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக என்று கடல்சார் மீட்புக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் சிறந்த வாழ்வு தேடி வரும் புலம்பெயர்ந்தோருக்கு ஸ்பெயின் முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக மாறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502