விளையாட்டு

சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்க அனுமதி கோரிய FAM

27/06/2024 07:17 PM

கோலாலம்பூர், 27 ஜூன் (பெர்னாமா) -- உள்நாட்டு கால்பந்து துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வுக் காண சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிச் ஷாவை சந்திக்க அனுமதி கோரியுள்ளதை மலேசிய காற்பந்து சங்கம் FAM-இன் தலைவர் டத்தோ ஹமிடின் முஹமட் அமின் இன்று உறுதிப்படுத்தினார்.

சுல்தான் ஷாராஃபுடின் வழங்கிய அறிவுறுத்தலை கருத்தில் கொண்டதால், நேற்று இஸ்தானா சிலாங்கூர் தரப்பை தாம் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய மகளிர் லீக் LWN தொடக்க விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ஹமிடின் அவ்வாறு தெரிவித்தார்.

மலேசிய கால்பந்து கூட்டமைப்பு, MFL மற்றும் FAM, குறிப்பாக அதன் தலைவர் டத்தோ ஹமிடின் ஆகியோரின் முடிவு குறித்து தாம் வருத்தம் அடைந்திருப்பதாக சுல்தான் ஷாராஃபுடின் நேற்று தெரிவித்தார்.

Selangor FC-க்கு விதிக்கப்பட்ட தண்டனை, பொறுப்பற்றது, மரியாதையின்றி செய்யப்பட்டதோடு, அநீதியாகவும் கருதப்படுவதாக சுல்தான் ஷாராஃபுடின் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]