விளையாட்டு

யூரோ 2024; போர்த்துகலை வீழ்த்திய ஜார்ஜியா

27/06/2024 07:21 PM

இங்கிலாந்து, 27 ஜூன் (பெர்னாமா) -- 2024 யூரோ கிண்ணக் காற்பந்து போட்டி.....

அதிகாலை நடைபெற்ற F குழுவுக்கான ஆட்டத்தில், 2-0 என்ற கோல் கணக்கில் போர்த்துகலை தோற்கடித்த ஜார்ஜியா  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவது ஆட்டத்திலேயே இந்தச் சாதனையைப் புரிந்த ஜார்ஜியா, இதன் வழி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

உலகின் 75-ஆவது இடத்தில் இருக்கும் ஜார்ஜியா, யூரோ போட்டியில் ஆறாவது இடத்தில் இருக்கும் போர்த்துகளுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த தரவரிசையில் இருந்தது.

இருப்பினும், ஜார்ஜியாவின் தாக்குதல் ஆட்டக்காரர் KHVICHA KYARATSKHELIA-விற்கு ஆட்டம் தொடங்கியுடன் முதல் கோலை அடிப்பதற்கு 93 விநாடிகள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆட்டத்தை சமநிலைப்படுத்த முயற்சித்த போர்த்துகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 57-ஆவது நிமிடத்தில் ஜார்ஜியாவின் ஆட்டக்காரர் GEORGES MIKAUTADZE தமது அணிக்கான இரண்டாம் கோலை அடித்து வெற்றியைச் சாதகமாக்கியது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]