உலகம்

ஐஸ்லாந்து தொடர் எரிமலை வெடிப்புகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை நீடிக்கலாம்

27/06/2024 07:12 PM

ஐஸ்லாந்து, 27 ஜூன் (பெர்னாமா) -- ஐஸ்லாந்தில் ஏற்பட்ட தொடர் எரிமலை வெடிப்புகள் பத்துக்கும் மேற்பட்ட அல்லது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் என்று டெரா நோவா பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தலைநகராக ரெய்க்ஜாவிக்கில் இருந்து தென்மேற்கு பகுதியில் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் 2021-ஆம் ஆண்டிலிருந்து எரிமலை வெடிப்புகள் தொடங்கின.

ஒரே ஒரு அனைத்துலக விமான நிலையமும் சுடு நீர் மற்றும் மின்சாரம் வழங்கும் சில புவிவெப்ப மின் நிலையங்களும் இங்குதான் அமைந்துள்ளன.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, ஐந்து பெரிய எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த நிலநடுக்கத் தரவுகளை, ஆராய்ச்சியாளர்கள்
பகுப்பாய்வு செய்துள்ளனர்.

பல்வேறு இடங்களிலிருந்து எரிமலைக்குழம்பை வேதியியல் மற்றும் இயற்பியல் அடிப்படையில் ஒப்பிட்டு, அது அதே நிலத்தடியில் தோன்றியதா என்பதை ஆய்வு செய்தனர்.

இது 10 கிலோமீட்டர் அகலத்தில் ஒன்பது முதல் 11 கிலோமீட்டர் ஆழத்தில் நடுத்தர அளவில் கற்குழம்பு குவிந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

2002-ஆம் ஆண்டிலிருத்து 2020-ஆம் ஆண்டுக்கு இடையில் அது உருவாகியிருக்கின்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]