பொது

கையூட்டு பெற்ற மாவட்ட பொறியியலாளர் & பொது சேவைத் துறை ஊழியருக்கு ஏழு நாள்கள் தடுப்புக் காவல்

26/06/2024 08:08 PM

ஈப்போ, 26 ஜூன் (பெர்னாமா) -- திட்ட அனுமதி தொடர்பாக கையூட்டு பெற்றதாக சந்தேகத்தின் பேரில், மாவட்ட பொறியியலாளர் மற்றும் பொது சேவைத் துறை ஊழியர் ஒருவருக்கு இன்று முதல் ஜூலை 2-ஆம் தேதி வரையில் 7 நாள்களுக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

40 வயதிற்குட்பட்ட அவ்விரு ஆடவர்களுக்கும் இரண்டாவது சிவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தைச் சேர்ந்த மாஜிஸ்திரேட் அதிஃபா ஹசிமா வஹாப், இன்று காலை 10.50 மணியளவில் அத்தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கூற்றுபடி, மூன்று லட்சத்து 48,700 ரிங்கிட் ரொக்கம், நான்கு லட்சம் ரிங்கிட் மீதமிருக்கும் அமானா சஹாம் நேஷனல் நிறுவனம், ஏ.எஸ்.என்.பி-இன் வங்கிக் கணக்குப் புத்தம் ஆகியவை தடுத்து வைக்கப்பட்டுள்ள மாவட்ட பொறியியலாளரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

2009-ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் செக்‌ஷன் 17 உட்பிரிவு (a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)