அரசியல்

சுங்கை பாக்காப்பில் தேர்தல் நடவடிக்கை அறை திறப்பு

22/06/2024 06:29 PM

நிபோங் திபால், 22 ஜூன் (பெர்னாமா) -- சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நிகழும் ஊழல் மற்றும் அதிகார மீறல் தொடர்பாக புகார்களை வழங்கும் பொருட்டு,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தேர்தல் நடவடிக்கை அறையை திறந்துள்ளது.

பினாங்கு எஸ்.பி.ஆர்.எம் தலைமையகம் மற்றும் செபராங் பிறை கிளை எஸ்.பி.ஆர்.எம்அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்தல் நடவடிக்கை அறை செயல்படும் என்று, ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த தேர்தல் நடவடிக்கை அறை ஜூலை 6-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்படும்.

ஊழல் மற்றும் அதிகார மீறல் குறித்த புகார்களை பொதுமக்கள் மின்னஞ்சல் மற்றும் அதிகாரப்பூர்வ தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)