விளையாட்டு

2024 யூரோ: 3 ஆட்டங்களிலும் முதல் நாடாக ஸ்பெயின் வெற்றி

25/06/2024 05:49 PM

ஃப்ளோரிடா, 25 ஜூன் (பெர்னாமா) -- 2024 யூரோ கிண்ணக் காற்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பி குழுவுக்கான ஆட்டத்தில் ஸ்பெயின் தொடர்ந்து தனது மூன்றாவது வெற்றியை உறுதி செய்தது.

இன்று அதிகாலை அல்பேனியா உடன் நடந்த ஆட்டத்தில் 1 - 0 என்று ஸ்பெயின் வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயினின் ஒரே வெற்றி கோல் 13-வது நிமிடத்தில் போடப்பட்டது.

ஃபேரன் தோரஸ் அடித்த அந்த கோலின் வழி, ஸ்பெயின் புள்ளிகளோடு பி குழு பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

அதோடு, இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட முதல் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.

ஒரு புள்ளியோடு கடைசி இடத்தில் இருக்கும் அல்பேனியா யூரோ கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியது.

இதனிடையே, அதே பி குழுவில், இத்தாலியும் குரோஷியாவும் சந்தித்த ஆட்டம் 1 -1 என்று சமநிலையில் முடிந்தது.

54-வது நிமிடத்தில் குரோஷியா முதலில் கோல் அடித்த வேளையில், இறுதி நிமிடங்களில் இத்தாலி அதன் ஒரு கோலைப் போட்டு சமநிலை கண்டது.

இந்த முடிவின் வழி, 4 புள்ளிகளோடு இத்தாலி அடுத்த சுற்றுக்குச் செல்லும் நிலையில், குரோஷியா அடுத்த சுற்றுக்குச் செல்வது இன்னும் உறுதியாகவில்லை.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)