அரசியல்

‘PADU’ கொள்கையைப் பயன்படுத்தி பிரச்சாரம் - டாக்டர் ஜோஹாரி

22/06/2024 06:37 PM

நிபோங் திபால், 22 ஜூன் (பெர்னாமா) -- சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் காலக்கட்டம் முழுவதிலும், வாக்காளர்களை நெருங்குவதற்கு ‘PADU’ கொள்கை குறித்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தவிருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜோஹாரி அரிஃபின் தெரிவித்தார்.

பாடு அமலாக்கத்திற்கு தகுந்தவாறு ஒருமைப்பாட்டு மதிப்புகளைக் கொண்டு பாடு என்ற வார்த்தை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

2008-ஆம் ஆண்டு முதல் கெஅடிலான் கட்சியின் வலுவான கோட்டையாக விளங்கிய சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியை மீட்டெடுக்கும் நம்பிக்கை கூட்டணியின் எண்ணத்தை நனவாக்க தாம் கடுமையாக உழைக்கவிருப்பதாக அவர்  குறிப்பிட்டார்.

அத்தொகுதி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சியின் வசமாகியது.

பினாங்கு, நிபோங் திபால், தாமான் டேசா ஜாவி, ஜாவி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)