அரசியல்

பிரச்சாரக் காலம் முழுவதும் சமூக ஊடகங்களில் நாகரீகமாக நடந்துக் கொள்ளுங்கள் - ஃபஹ்மி

22/06/2024 06:47 PM

நிபோங் திபால், 22 ஜூன் (பெர்னாமா) -- சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் முழுவதும், சமூக ஊடகங்களில் நேரலையாக பதிவிடும்போது, எப்போதும் நாகரீகமாகவும், நன்முறையிலும் நடந்துக் கொள்ளும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு கட்சி ஆதரவாளர்களும், இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் எனப்படும் 3R உட்பட மோசமான மற்றும் சட்டத்தை மீறும் கூற்றுகளை வெளியிடுவதைத் தவிர்க்க தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் அந்த நிலைவுறுத்தலைச் செய்திருக்கின்றார்.

சூழ்நிலையை குழப்புவதற்காக மோசமான கருத்துகளை வெளியிடுவதற்கு போலி கணக்குகளைப் பயன்படுத்துபவார்கள் என்பது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, முகநூல், டிக்டோக் நேரலை போன்றவற்றில் ஒரு கருத்தை பதிவிட்டால்,  எந்த விளைவும் இல்லை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால், அது அவ்வாறு இல்லை. இந்தக் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். சில தரப்பினர், கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தினால், நேரலையில் 3R தொடர்பான கருத்துகளை வெளியிட்டால், எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர். 

இன்று, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் சுங்கை பக்காப் சட்டமன்ற வேட்பாளர், ஜோஹாரிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தபோது, அவர் அவ்வாறு கூறினார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)