விளையாட்டு

கோபா அமெரிக்காவை வெற்றியுடன் தொடங்கியது அமெரிக்கா

24/06/2024 08:09 PM

டெக்சஸ், 24 ஜூன (பெர்னாமா) -- கோபா அமெரிக்கா கிண்ண காற்பந்து போட்டி..

உபசரனை நாடான அமெரிக்கா, C குழுவில், 2-0 என்ற கோல்களில் பொலீவியாவை தோற்கடித்து தனது போட்டியை உற்சாகமாகத் தொடங்கியுள்ளது.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த அமெரிக்கா, பின்னர் 44-வது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு, முதல் பாதியை 2-0 என்ற நிலையில் முடிந்தது.

சொந்த அரங்கில் விளையாடியதால், பொலீவியாவின் கோல் முயற்சிகளை லாவகமாகத தடுத்து அமெரிக்க இறுதிவரை தனது நிலையைத் தற்காத்தது.

கிரேக் பெர்ஹல்டர் தலைமையிலான அமெரிக்க அணி இந்த வெற்றியின் வழி 3 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இருந்தும், அப்பட்டியலில் கடும் போட்டியைக் கொடுக்கும் உருகுவே, பனாமா, மற்றும் பொலீவியா ஆகிய அணிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கிரேக் பெர்ஹல்டர் அமெரிக்க அணியினருக்கு நினைவுறுத்தினார்.

சி குழுவின் மற்றுமொரு ஆட்டத்தில், உருகுவே 3-1 எனும் கோல்களில் பனாமாவை வீழ்த்தியது.

முதல் பாதியில், ஒரு கோலை அடித்து உருகுவே ஆக்கிரமித்தாலும், இரண்டாம் பாதியில்
பனாமாவுடன் அது கடும் சவாலை எதிர்கொண்டது.

ஆயினும், விடாது முயற்சித்து, இறுதி நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து உருகுவே தனது வெற்றியை உறுதி செய்தது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)