விளையாட்டு

கோபா அமெரிக்கா: கோல் போடும் வாய்ப்பை தவறியது பிரேசில்

25/06/2024 05:40 PM

ஃப்ளோரிடா, 25 ஜூன் (பெர்னாமா) -- கோபா அமெரிக்கா கிண்ண காற்பந்து போட்டி,

இன்று அதிகாலை நடைபெற்ற டி குழுவில், கோஸ்டா ரிக்கா உடனான ஆட்டத்தில், பிரேசில் கோல்கள் ஏதுமின்றி ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.

ஆட்டத்தை 75 விழுக்காடு வரையில் பிரேசில் ஆக்கிரமித்த போதிலும், கோல்கள் போட்டும் வாய்ப்பை பிரேசில் தவறவிட்டதால், 3 புள்ளிகள் பெறும் வாய்ப்பையும் அது நழுவ விட்டது.

10-வது கோபா அமெரிக்கா கிண்ணத்தை குறி வைத்து களமிறங்கிய பிரேசில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் முதல் ஆட்டத்தை முடித்திருக்கின்றது.

கோஸ்டா ரிக்காவின் தற்காப்பு அரண் உறுதியாக நின்றதால், அதனைத் தகர்ப்பதில் பிரேசில் கடும் சவாலை எதிர்நோக்கியது.

சமநிலை அடைந்ததால், டி குழுவுக்கான பட்டியலில், ஒரு புள்ளியோடு பிரேசில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வேளையில், கோஸ்டா ரிக்காவும் ஒரே புள்ளியோடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதனிடையே, டி குழுவுக்கான மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா 2-1 எனும் கோல்களில் பராகுவேவை தோற்கடித்திருக்கின்றது.

கொலம்பியாவின் இரு கோல்களும் முதல் பாதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டது.

பராகுவேவின் ஒரே கோல், இரண்டாம் பாதியில் போடப்பட்டது.

இந்த வெற்றியின் வழி, கொலம்பியா பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)