உலகம்

இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் ஆயிரக்கணக்கானோர் கூடினர்

23/06/2024 05:59 PM

டெல் அவிவ், 23 ஜூன் (பெர்னாமா) -- இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிரான வாராந்திர ஆர்ப்பாட்டத்தில் நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

புதிய தேர்தல் முறை மற்றும் காசாவில் பணயக்கைதிகளை விடுவிக்க கோரி மக்கள் டெல் அவிவ் வீதிகளில் பேரணிகளில் இறங்கினர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சரவையைக் கண்டிக்கும் விதமாக பதாதைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை அவர்கள் கோரியதோடு, காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்குமாறும் குரல் எழுப்பினர்.

காசா போர் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பென்னி காண்ட்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவ் கேலன்ட் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய போர் அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் நெதன்யாகுவிற்கும், போர் அமைச்சரவை அதிகாரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பென்னி காண்ட்ஸ் இந்த போர் அமைச்சரவையில் இருந்து வெளியேதை அடுத்து, செல்வாக்குமிக்க தமது போர் அமைச்சரவையைக் நெதன்யாகு கலைத்துள்ளார்,

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)