உலகம்

மாஸ்கோ: கட்டிடம் தீப்பிடித்ததில் எண்மர் பலி

25/06/2024 07:45 PM

ரஷ்யா, 25 ஜூன் (பெர்னாமா) -- மாஸ்கோவின் Fryazino நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் குறைந்தது எண்மர் உயிரிழந்தனர்.

அவர்களில் இருவர் ஜன்னல் வழியாக மேலிருந்து குதித்ததால் உயிரிழந்ததாக உள்நாட்டு அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பற்றியதில் கட்டிடத்தின் உள்கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் எஞ்சிய அறுவர் உயிரிழந்ததாக அவசர சேவை பிரிவைக் கோடி காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட எட்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து புகை வெளியேறும் காட்சிகள் கொண்ட காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 12 தீயணைப்பு வண்டிகளும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]