உலகம்

காசாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான சிறார்கள் பள்ளிக்குச் செல்லவில்லை

29/06/2024 06:34 PM

காசா, 29 ஜூன் (பெர்னாமா) -- காசாவில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் போரினால் சுமார் ஆறு லட்சத்து 25,000க்கும் அதிகமான சிறார்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் வேலை மற்றும் உதவி நிறுவனம், UNRWA வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அவர்களில் சுமார் மூன்று லட்சம் பேர் UNRWA மாணவர்கள் என்று பாலஸ்தீனிய செய்தி நிறுவனம், WAFA தெரிவித்துள்ளது.

சிறார்களை பள்ளிக்கு திரும்பச் செல்ல தயார்படுத்துவதற்கும் அவர்களின் கல்வி உரிமையை மீட்டெடுப்பதற்கும் UNRWA குழுவின் விளையாட்டு மற்றும் கற்றல் நடவடிக்கைகள் அவசியம் என்று அந்நிறுவனம் கூறியது.

ரஃபாவில், தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அனைத்துலக நீதிமன்றம், ஐ.சி.ஜே இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட போதிலும் அதனை அது பொருட்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் 86,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும், குறைந்தது பாத்தாயிரம் பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]