விளையாட்டு

கோபா 2024 கிண்ண காற்பந்து: வெனிசுலா காலிறுதிக்கு தகுதி பெற்றது

01/07/2024 08:27 PM

டெக்சஸ், 01 ஜூலை (பெர்னாமா) -- கோபா 2024 கிண்ண காற்பந்து போட்டி.

ஜமாய்க்காவை 3- 0 என்ற கோல்களில் தோற்கடித்து B குழுவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கின்றது வெனிசுலா.

அமெரிக்கா, டெக்சாஸ்சில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் வெனிசுலாவும் ஜமாய்க்காவும் சந்தித்தன.

அதில், முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்த வேளையில் வெனிசுலாவின் மூன்று கோல்களும் இரண்டாம் பாதியில் போடப்பட்டன.

முன்னதாக, இக்குவாடோர் மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளை வீழ்த்தி காலிறுதிக்கு வெனிசுலா தகுதிப் பெற்ற போதிலும் இன்றைய ஆட்டத்தின் வழி அதனை மீண்டும் இறுதி செய்தது.

காலிறுதியில் அது கனடாவுடன் மோதுகின்றது.

இதனிடையே, B குழுவின் மற்றோர் ஆட்டத்தில் இக்குவாடோரும் மெக்சிக்கோவும் கோல்களின்றி சமநிலையை அடைந்தன.

ஆயினும், பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்து அடுத்த ஆட்டத்திற்குத் தகுதிப் பெற்றிருக்கும் இக்குவாடோர் வரும் வெள்ளிக்கிழமை அர்ஜெண்டினாவுடன் களம் காணவிருக்கின்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]