உலகம்

அதிகமான காப்புரிமை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நாடாக சீனா

29/06/2024 06:26 PM

பெய்ஜிங், 29 ஜூன் (பெர்னாமா) -- உலகளவில் மிக அதிகமான காப்புரிமை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நாடாக சீனா உள்ளது.

2022-ஆம் ஆண்டின் காப்புரிமை விண்ணப்பங்களில் சுமார் 50 விழுக்காட்டை அந்நாடு கொண்டுள்ளதாக ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு உலகளவில் 34 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் 1980-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை ஆறு லட்சத்து 35-ஆயிரமாக மட்டுமே இருந்தது.

அதில், சீனா மொத்தம் 44 விண்ணப்பங்களை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டின் அறிவியல் வளர்ச்சி மற்றும் அதன் விளைவாக மேற்கொள்ளப்படும் காப்புரிமை உருவாக்கம், நவீன பொருளாதார வரலாற்றில், இதுவரை இல்லாத ஒன்று என்று ஜெர்மனி ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்து நிறுவனங்களின் சங்கத்தின், தலைமை பொருளாதார நிபுணர் கிளாஸ் மிஷெல்சன் தெரிவித்தார்.

2000-ஆம் ஆண்டு, அறிவியல் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை சீனா உருவாக்கிய நிலையில், இது, பல்கலைக்கழக மாணவர்களின் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

அக்காலக்கட்டத்தில், 70 லட்சமாக இருந்த மாணவர் எண்ணிக்கை இவ்வாண்டு 3 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]