பொது

பொருளாதார சக்தியாக மலேசியாவை உருவாக்க முடியும் - அன்வார்

25/06/2024 07:51 PM

கோலாலம்பூர், 25 ஜூன் (பெர்னாமா) -- இவ்வட்டாரத்தில் ஒரு மிகப் பெரிய பொருளாதார சக்தியாக மலேசியாவை உருவாக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.  

இதற்கு, திறந்த முதலீட்டை நடைமுறைப்படுத்தும் ஒரு வர்த்தக நாடாக மலேசியா தனது அந்தஸ்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது முக்கியம் என்று பிரதமர் கூறினார்.

வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து முதலீடு செய்யப்படுவதை மலேசிய அரசாங்கம் எப்போதும் ஆதரிப்பதாகவும், இந்நாடு போட்டித்தன்மையுடன் தொடர்ந்து வளர்ச்சியடைவதை இது உறுதி செய்யும் என்றும் அன்வார் விவரித்தார்.   

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிக்கும் வெளிநாட்டு முதலீட்டின் ஓர் உதாரணம் பினாங்கு என்று பிரதமர் மேலும் கூறினார். 

இன்று, வணிக சபை, Amcham-இன் 47-வது பொதுப் பேரவையின் மதிய உணவு விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]