விளையாட்டு

இந்தோனேசிய அனைத்துலக வெற்றியாளர் கபடி போட்டியில் மலேசிய அணி தங்கம்

20/06/2024 08:40 PM

கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) --  2024 இந்தோனேசிய அனைத்துலக வெற்றியாளர் கபடி போட்டியில் மலேசிய அணி முதன் முறையாக ஒரு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

மலேசிய கபடி வரலாற்றில், அனைத்துலக போட்டியின் வழி நாட்டிற்கு கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரையில் இந்தோனேசியா, பாலியில் இந்தக் கபடிப் போட்டி நடைபெற்றது.

NATIONAL STYLE, SUPER FIVE, மற்றும் 3 STAR ஆகிய மூன்று பிரிவுகளில் நடந்தப் போட்டிகளில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றிருப்பது பெருமையளிப்பதாக மலேசிய கபடி சங்கத்தின் பொது செயலாளர் பீட்டர் கோபி தெரிவித்தார்.

''NATIONAL STYLE பிரிவில் ஆண்கள் வெள்ளி பதக்கமும்,  3 STAR பிரிவில் பெண்கள் தங்கப் பதக்கமும், SUPER FIVE பிரிவில் பெண்கள் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்தத் தங்கப்பதக்கம் எங்களுக்கு வரலாற்றில் மிகப்''

கபடி போட்டியானது இன்றைய நாளில், பள்ளிகள் தொடங்கி உயர்கல்வி கழகங்கள் வரை விரிவடைந்திருக்கின்றது.

அதோடு, மலேசியாவில் பல சவால்களுக்கு மத்தியில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் கபடி அணி, அனைத்துலக அளவில் வெற்றியடைந்திருப்பது இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்த ஒரு சாதனை என்று பீட்டர் கூறினார்.

சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தாங்கள் அடைந்த வெற்றியில் திருப்தி கொள்வதாக, சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள் குறிப்பிட்டனர்.

''தங்களது எதிர் அணி போட்டியாளர்கள் அனைவரும் அனுபவத்திலும் உடல் அளவிலும் பெரியவர்களாக இருந்தனர். எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. இருந்தாலும், பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்குவிப்பும் பயிற்சியினாலும் எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது,'' என்று அவர்கள் கூறினர்.

வரும் காலங்களில், கபடி போட்டியில் தங்களின் முயற்சியும் வளர்ச்சியும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் என்று இன்று பெர்னாமா செய்திகளிடம் அவர்கள் தெரிவித்தனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502