உலகம்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்தோரின் பலி எண்ணிக்கை உயர்வு

20/06/2024 07:55 PM

கள்ளக்குறிச்சி, 20 ஜூன் (பெர்னாமா) --  தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுவரை அதன் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், புதுச்சேரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. 

அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)